தைபே: தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. அதே நேரத்தில், தைவான் தன்னாட்சி கேட்டு வருகிறது.
இந்நிலையில், தைவான் அதிபர் டிசாய் இங்வென், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று அந்த நாட்டின் மக்கள் பிரதிநிதி சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தைவான் அருகே சீனா பெரும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.
சீனாவின் போர்ப்பயிற்சி முடிந்த நிலையில், தைவான் அருகே, கடல் பகுதி வழியாக, அமெரிக்க கடற்படையின், யு.எஸ்.எஸ்., மிலியஸ் போர்க் கப்பல் கடந்து சென்றது. இது வழக்கமான பயணம் என, அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement