விடைத்தாள் திருத்தும் பணி – தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் நடைபெற்று வரும் பொது தேர்வுகள், இன்னும் சில நாள்களில் முடிய உள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை தற்போது எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் முடிவுகள் வெளியிடப்படும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் பணிக்கு ஆசிரியர்களை தனியார் பள்ளிகள் தவறாமல் அனுப்ப வேண்டும். தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு அனுப்பி வைத்தால் மட்டுமே பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்” என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் எந்த ஒரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாமல் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.