புதுடில்லி, புதிய உருமாறிய கொரோனா வைரசால், ௪௩௬ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பரிசோதனைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரசின் உருமாறிய வகையான ஒமைக்ரானின் துணை உருமாறிய வகையான, எக்ஸ்.பி.பி., – ௧.௧௬ பரவல் நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது, ஜனவரியில் உறுதியானது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு எந்த வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக, பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
‘இன்சகாக்’ எனப்படும், கொரோனா வைரஸ் பகுப்பாய்வு கூட்டமைப்பின் தகவலின்படி, நம் நாட்டில் இதுவரை, இந்த புதிய துணை உருமாறிய வகையால், ௪௩௬ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement