இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களில் பிரபலமாகவும், குறைந்த விலையில் அதிகப்படியான ரேஞ்சு வழங்குகின்ற சிறந்த மாடல்களின் தொகுப்பினை அறிந்து கொள்ளலாம்.
எலக்ட்ரிக் கார்களின் ரேஞ்சு, செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் உட்பட அனைத்து மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 400, டிகோர் EV, டியோகோ EV , சிட்ரோன் என ₹ 20 லட்சம் விலைக்குகள் அமைந்துள்ள மாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
2023 Tata Nexon EV
நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் EV எஸ்யூவி காரில் 312 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற நெக்ஸான் EV Prime மற்றும் 453 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற நெக்ஸான் EV Max என இரு விதமாக மாறுபட்ட ரேஞ்சு கொண்டதாக கிடைக்கின்றது. கூடுதலாக டார்க் எடிசன் என்ற சிறப்பு மாடலும் விற்பனையில் உள்ளது. நெக்ஸான் EV காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 14,49,000 முதல் அதிகபட்சமாக ₹ 19,54,000 வரை கிடைக்கின்றது.
Nexon EV Specs | Nexon EV Prime | Nexon EV Max |
---|---|---|
பேட்டரி திறன் | 30.2 kWh battery | 40.5 kWh battery |
மோட்டார் பவர் | 129 PS | 143 PS |
மோட்டார் டார்க் | 245 Nm | 250 Nm |
Range (MIDC) | 312 km | 453 km |
Real Driving Range | 170-210 km | 320-350 km |
அதிகபட்ச வேகம் | 120 km/h | 120 km/h |
Acceleration | 0-100 kmph in 9.9 seconds | 0-100 kmph in 9.0 seconds |
சார்ஜிங் நேரம் | 50Kw DC FC 0-80% charge in 56 minutes
15A 0-100% charge in 15 hrs 7.2 Kw AC FC 0-80% charge in 6.5 hrs |
50Kw DC FC 0-80% charge in 60 minutes
15A 10-90% charge in 9.10 hrs |
2023 டாடா நெக்ஸான் EV Prime தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 15.41 லட்சம் முதல் ₹ 18.60 லட்சம் ஆகும்.
2023 டாடா நெக்ஸான் EV Max தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 17.74 லட்சம் முதல் ₹ 20.85 லட்சம் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் EV காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.
2023 Mahindra XUV400
ரூ. 20 லட்சம் விலைக்குகள் அதிக ரேஞ்சு வழங்கும் மாடலாக விளங்குகின்ற மஹிந்திரா XUV400 எஸ்யூவி மாடலுக்கு சவாலாக நெக்ஸான் இவி விளங்குகின்றது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 456 கிமீ ஆக உள்ளது. EC வேரியண்டில் 34.5KWh அதிகபட்சமாக 375 கிமீ ரேஞ்சு வழங்கும், EL வேரியண்டில் 39.4KWh அதிகபட்சமாக 456 கிமீ ரேஞ்சு என இரண்டு விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.
XUV400 Specs | XUV400 EC | XUV400 EL |
---|---|---|
பேட்டரி திறன் | 34.5 kWh battery | 39.4 kWh battery |
மோட்டார் பவர் | 150 PS | 150 PS |
மோட்டார் டார்க் | 310 Nm | 310 Nm |
Range (MIDC) | 375 km | 456 km |
Real Driving Range | 275-285 km | 320-350 km |
அதிகபட்ச வேகம் | 150 km/h | 150 km/h |
Acceleration | 0-100 kmph in 8.3 seconds | 0-100 kmph in 8.3 seconds |
சார்ஜிங் நேரம் | 50Kw DC FC 0-80% charge in 50 minutes
3.3 kW AC 0-100% in 13 hrs |
50Kw DC FC 0-80% charge in 50 minutes
7.2 kW AC 0-100% in 6:50 hrs 15A 0-100% charge in 13 hrs |
2023 மஹிந்திரா XUV400 எஸ்யூவி தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 17.45 லட்சம் முதல் ₹ 20.80 லட்சம் வரை உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் XUV400 எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது வரம்பற்ற கிமீ , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.
2023 Citoren eC3
இந்தியாவில் கிடைக்கின்ற மிக விலை குறைவான காம்பேக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான சிட்ரோன் eC3 எஸ்யூவி காரில் 29.2Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 320 கிமீ பயணிக்கலாம். இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைத்தாலும் வசதிகளில் மட்டுமே மாற்றம் உள்ளது.
Citroen | eC3 |
---|---|
பேட்டரி திறன் | 29.2 kWh battery |
மோட்டார் பவர் | 57 PS |
மோட்டார் டார்க் | 143 Nm |
Range (MIDC) | 320 km |
Real Driving Range | 190-210 km |
அதிகபட்ச வேகம் | 107 km/h |
Acceleration | 0-60 kmph in 6.8 seconds |
சார்ஜிங் நேரம் | 50Kw DC FC 10-80% charge in 57 minutes
15amp 10-100% in 10:30 hrs |
2023 சிட்ரோன் eC3 எஸ்யூவி தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 12.21 லட்சம் முதல் ₹ 13.20 லட்சம் வரை கிடைக்கின்றது.
சிட்ரோன் நிறுவனம் eC3 எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் 7 வருடம் அல்லது 1,40,000 km மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 5 வருடம் அல்லது 1,00,000 km வழங்கப்பட்டுள்ளது.
2023 Tata Tigor.ev
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடலான டிகோர்.ev செடானில் 26 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315 கிமீ வரையிலான ரேஞ்சு வழங்குகின்றது. டாடா டிகோர் EV காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 12.49 லட்சம் முதல் ₹ 13.75 லட்சம் வரை கிடைக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் | Tata Tigor.ev |
---|---|
பேட்டரி திறன் | 26 kWh battery |
மோட்டார் பவர் | 74.7 PS |
மோட்டார் டார்க் | 170 Nm |
Range (MIDC) | 315 km |
Real Driving Range | 210-240 km |
அதிகபட்ச வேகம் | 120 km/h |
Acceleration | 0-60 kmph in 5.7 seconds |
சார்ஜிங் நேரம் | 50Kw DC FC 10-80% charge in 59 minutes
15amp 10-100% in 9:40 hrs |
2023 டாடா டிகோர் ev செடான் காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 13.17 லட்சம் முதல் ₹ 14.48 லட்சம் வரை கிடைக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.
2023 Tata Tiago.ev
டியாகோ எலக்ட்ரிக் காரில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315 கிமீ மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 250 கிமீ ஆக உள்ளது. டாடா டியாகோ EV காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 8.69 லட்சம் முதல் ₹ 11.99 லட்சம் வரை கிடைக்கின்றது.
Tata Motors | Tiago.ev XE, XT | Tiago.ev |
---|---|---|
பேட்டரி திறன் | 19.2 kWh battery | 24 kWh battery |
மோட்டார் பவர் | 61 PS | 74.7 PS |
மோட்டார் டார்க் | 310 Nm | 150 Nm |
Range (MIDC) | 250 km | 315 km |
Real Driving Range | 170 km | 210-250 km |
அதிகபட்ச வேகம் | 120 km/h | 120 km/h |
Acceleration | 0-60 kmph in 6.2 seconds | 0-60 kmph in 5.7 seconds |
சார்ஜிங் நேரம் | 50Kw DC FC 10-80% charge in 59 minutes
15amp 10-100% in 9:40 hrs |
50Kw DC FC 10-80% charge in 59 minutes
15amp 10-100% in 9:40 hrs |
2023 டாடா டியாகோ.ev காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 9.12 லட்சம் முதல் ₹ 12.65 லட்சம் வரை கிடைக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.