அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான ரேஸில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. சட்டப் போராட்டத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால்
விடுவதாக இல்லை. தன் முன்னால் இருக்கும் சட்ட வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பார்க்க தயாராகி விட்டார். இதையொட்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு, தேர்தல் ஆணையத்தில் முறையீடு என அடுத்தடுத்து மும்முரம் காட்டி வருகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி
இதற்கிடையில் தன்னை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்திருந்தார். கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. எனவே அங்கு சில இடங்களில் போட்டியிட எடப்பாடி தரப்பு ஆலோசித்து வருகிறது. அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனில், அதற்குரிய ஏ பார்ம், பி பார்மில் கட்சியில் அதிகாரமிக்க நபர் கையெழுத்திட வேண்டும்.
தேர்தல் ஆணைய அங்கீகாரம்
அந்த கையெழுத்து தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் தான் அதிமுக வேட்பாளருக்கு அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னம் கிடைக்கும். மக்கள் மத்தியிலும் பெரிதாக எடுபடும் என்ற கணக்கு போட்டு வைத்துள்ளனர். எனவே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்ற விஷயம் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. இதன் விசாரணையில் 10 நாட்களில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஓ.பன்னீர்செல்வம் மனு
இதையடுத்து டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார். எனவே இவர் தான் கட்சியின் தலைவர். வேறு பதவிகள் எதுவும் கிடையாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு ஒன்றை இன்றைய தினம் அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி மீது குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டோம். இதுதான் தற்போதும் தொடர்கிறது. ஆனால் கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தனது கைகளில் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். தன்னிச்சையாக கட்சியின் சட்ட விதிகளை திருத்தி முறைகேடாக கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளார். இதனை ஏற்கக் கூடாது.
கர்நாடக தேர்தலால் அழுத்தம்
அதுமட்டுமின்றி கடந்த ஜூலை 11 பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மேலும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை எதிர்த்து தொடரப்பட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டி பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.