நகராட்சி நிர்வாகத்துறை சூப்பர் அறிவிப்பு: சொத்து வரியில் 5 சதவீதம் ஆஃபர்!

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் விதிகள் 2023, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84 (1) ல் , Five percent of the net property tax payable by an assessee, subject to a maximum of five thousand rupees shall be granted as an incentive, who has paid the property tax within thirty days from the date of commencement of the half-year. அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை செலுத்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் பல்வேறு வகைகளான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளர்கள் , மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வசூல்மையங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.