பா.ஜ., – எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய ஆலோசிக்கும் பச்சேகவுடா, இது குறித்து ஆதரவாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளார்.
சிக்கபல்லாபூர் பா.ஜ., – எம்.பி., பச்சேகவுடா, முந்தைய சட்டசபை தேர்தலில், பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட் தொகுதியில் தன் மகன் சரத்துக்கு, ‘சீட்’ பெற அதிகபட்சம் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சரத், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் பா.ஜ.,வில் இணைய ஆர்வம் காண்பித்தும், நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்ததால், சரத்தை கட்சியில் சேர்க்க முடியவில்லை. அதன்பின் காங்கிரசில் இணைந்து, தற்போது ஹொஸ்கோட் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, அமைச்சர் நாகராஜ் போட்டியிடுகிறார்.
அமைச்சர் நாகராஜ் களத்தில் இருப்பதால், மகனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பா.ஜ., – எம்.பி.,யாக இருப்பதால், பச்சேக வுடாவால் தேர்தலில் தன் மகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியவில்லை.
எனவே எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் இருந்து விலக ஆலோசிக்கிறார்.
இது தொடர்பாக, தன் ஆதரவாளர்களின் கருத்துகளை கேட்க, பச்சே கவுடா திட்டமிட்டுள்ளார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement