Mrunal Thakur: முதல் படம் சூப்பர் ஹிட், 2வது படத்திலேயே சம்பளத்தில் நயன்தாரா, த்ரிஷா முந்திய மிருணாள்?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Mrunal Thakur salary:சீதா ராமம் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமான மிருணாள் தாகூருக்கு நானியுடன் சேர்ந்து நடிக்க பெத்த தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார்களாம்.

​மிருணாள் தாகூர்​மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிருணாள் தாகூர். Vitti Dandu என்கிற மராத்தி மொழி படம் மூலம் நடிகையானார். ரித்திக் ரோஷனின் சூப்பர் 30, ஃபர்ஹான் அக்தரின் தூஃபான், ஷாஹித் கபூரின் ஜெர்சி ஆகிய இந்த படங்களில் நடித்த மிருணாளுக்கு துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீசா ராமம் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இளவரசியாக சிறப்பாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர்.
​சீதா ராமம்​சீதா ராமம் படம் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் மிருணாள். இந்நிலையில் அவருக்கு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் பிரபல தெலுங்கு நடிகரான நானியின் நானி30வது படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு மிருணாளிடம் கேட்க அவரும் உடனே ஓகே என்று சொல்லி நடிக்க வந்துவிட்டார்.

​சம்பளம்​நானி30 படத்தில் நடிக்க மிருணாள் தாகூருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பள விபரம் வெளியாகியிருக்கிறது. நானியுடன் சேர்ந்து நடிக்க மிருணாளுக்கு ரூ. 6 கோடி சம்பளமாம். தன் முதல் தெலுங்கு படமான சீதா ராமத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்கினார். இந்நிலையில் 2வது தெலுங்கு படத்தில் நடிக்க தன் சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்திவிட்டார். தயாரிப்பாளரும் மிருணாள் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.
​நயன்தாரா​Nayanthara: என்னது, KH234ல் கமலுக்கு ஜோடி த்ரிஷாவும், நயன்தாராவுமா?மிருணாள் வாங்கியிருக்கும் சம்பளம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோரின் சம்பளத்தை விட அதிகம் ஆகும். படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குகிறார் நயன்தாரா. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி கேட்கிறார் த்ரிஷா. பல ஆண்டுகளாக நடித்து வரும் அவர்களை ஒரே படத்தில் சம்பள விஷயத்தில் முந்திவிட்டாரே மிருணாள் தாகூர் என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​நானி 30​நானி, மிருணாள் தாகூர் நடித்து வரும் நானி 30 படம் வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ரிலீஸ் செய்யப்படும். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நானி. அதில் ஒரு சிறுமி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு நானியை கட்டிப்பிடித்திருக்கிறார். இது அப்பா, மகள் இடையேயான பாசம் பற்றிய படமாக இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.