வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பது குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஒரு பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, அரசியல்சாசன அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்தவிவகாரத்தை பார்லிமென்டிடம் விட்டுவிட வேண்டும். ஒரு பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக்கக் கோருவது என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. இது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்பட்டது.
ஆனால் வழக்கின் மனுதாரர்கள், ஒரு பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் மாநில அரசுகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மாநில அரசுகளின் சட்ட வரம்பில் வருகிறது.
இந்த வழக்குகளில் மாநில அரசுகளை பங்கேற்க செய்ய வேண்டும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்படும் வரை இந்த வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கூறினார். ஆனால், இதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement