தொழிலதிபர்களை மிரட்டும் பா.ஜ., காங்., தலைவர் சிவகுமார் புகார்| BJP, Congress leader Sivakumar complains of threatening businessmen

பெங்களூரு : ”தேர்தலில் காங்கிரசுக்கு உதவக்கூடாது என தொழிலதிபர்களை, பா.ஜ., மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம் சாட்டினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சட்டசபை தேர்தலில், எங்களுக்கு உதவக்கூடாது என்று எங்கள் நண்பர்களையும், தொழிலதிபர்களையும் பா.ஜ.,வும், வருமான வரித்துறை அதிகாரிகளும் மிரட்டுகின்றனர்.

வழக்கமாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது எங்களின் போன் அழைப்புகளை எடுப்பதில்லை. மிரட்டுவதாக இருந்தால் மிரட்டட்டும். எங்களுக்கு பயம் இல்லை.

இத்தேர்தலில் மக்கள் எங்களுடன் உள்ளனர்.

லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்ததால், கட்சிக்கு கூடுதலாக 10 இடங்கள் கிடைக்கும். இதன் மூலம் வீரசைவ சமுதாயத்தினரின் 2 – 3 சதவீத ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கும்.

சாம்ராஜ் நகரில் இருந்து பீதர் வரை இச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். கட்சியின் சித்தாந்தத்தை ஏற்கும் யார் வேண்டுமானாலும் கட்சியில் சேரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.