சென்னை: “இது சட்டமன்றம்.. எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க” என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு சற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின.
சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் கேள்விக்கு மீன்வளத்துறை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவையில் உறுப்பினர்கள் இடம் மாறி அமர்ந்து இருந்தனர்.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு, “உறுப்பினர்கள் எல்லாரும் அவரவர் இடத்தில் அமருங்கள். இது லைவ் ப்ரோகிராம். எல்லாரும் லைவ்ல பார்த்துட்டு இருக்காங்க. உங்கள் இஷ்டத்திற்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து பேசாதீர்கள்.” என்று கடிந்து கொண்டார்.