வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கார்துாம்: சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கார்துாம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. இதில், இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 2,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். சூடானில் வசிக்கும் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கார்துாம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். உணவு, தண்ணீர் இல்லை, தங்கியிருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கார்துாம் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல்நிலை நிலவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement