வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெஹ்ரான் : ‘எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்’ என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தினத்தையொட்டி, ஈரானில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பேசியதாவது: இஸ்ரேல் நம் நாட்டிற்கு எதிராக எடுக்கும் சிறிய நடவடிக்கைகளுக்குக் கூட கடுமையான பதிலடி கிடைக்கும். பிராந்தியத்தின் அமைதியை வழி நடத்தும் நட்பு நாடுகளுடன் எங்கள் படை நட்புடன் இருக்கும். மத்திய கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும்.
ஈரானின் அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஈரானின், ராணுவ படைகள் மத்திய கிழக்கு பகுதி வரை விரிந்து பரவியுள்ளன. லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கு ஈரானின் ஆதரவும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், இன்றைய ஈரானை நாஜி காலத்தில் இருந்த ஜெர்மனியுடன் ஒப்பிட்டு பேசினார். யூத மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement