உனக்கு 18, எனக்கு 21… உச்ச நீதிமன்றத்தில் சிக்கலை ஏற்படுத்திய தன்பாலின ஈர்ப்பாளர் திருமண வழக்கு

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில், இன்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் தொடர்பான விவகாரம் புதியதொரு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எஸ். ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

LGBTQ+

இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி “சிறப்புத் திருமணச் சட்டம், 1954 பிரிவு 4-ல் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது தொடர்பான நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் துணைப் பிரிவு 3-ல் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், தன்பாலின ஈர்ப்பாளர்களில் யார் 21 வயதுடையவராகவும், 18 வயதுடையவராகவும் இருப்பது? சிறப்புத் திருமணச் சட்டத்தில் மற்ற பிரிவுகளுக்கு பாலின நடுநிலை விதிகளைப் பயன்படுத்தினாலும், பிரிவு 4-க்கு அதைச் செய்ய முடியாது” என்றார்.

அதனைத் தொடர்ந்து “வயதைப் பொறுத்தவரை ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் யாராக இருப்பினும் அவர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 மற்றும் 21 பொருந்தும்.

99 சதவிகித வழக்குகளில் திருநர் கூறும் பாலினத்தின் அடிப்படையில் பாலினம் தீர்மானிக்கப்படலாம். ஆணாக இருந்து பெண் என தெரிவித்தால், பெண்ணின் வயது கருத்தில் கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.