கியூட் நுழைவுத் தேர்வு ஜூன் 5ம் தேதி துவக்கம் | The cute entrance exam will start on June 5

புதுடில்லி, நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில், முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக கடந்த மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேதிகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், வரும் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடக்கவுள்ளன. தேர்வுகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்படும்.

இது தொடர்பான விபரங்களுக்கு, www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்., 19 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.