தமிழ்நாட்டில் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம் – நெல்லை இடையே வரும் 27ஆம் தேதி, மே 4, 11, 18 மற்றும் 25 ஆகிய 5 நாட்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கம் நெல்லையில் இருந்து வரும் 28ஆம் தேதி, மே 5, 12, 19 மற்றும் 26ஆம் தேதிகளில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்.

நாகர்கோவில் – தாம்பரம் இடையே வரும் 23ஆம் தேதி, 30, மே 7, 14, 21, 28 ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய 11 நாட்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து முறையே மறுநாட்கள் நாகர்கோவில் செல்லும்.

திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அத்துடன், தாம்பரம் – நெல்லை இடையே வரும் 26ஆம் தேதி மற்றும் மே 3, 10, 17, 24 ஆகிய 5 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் முறையே மறுநாட்கள் தாம்பரத்துக்கு கிளம்பும்.

தாம்பரம் – நாகர்கோவில் இடையே ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய 6 நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 22, 29 மற்றும் மே 6, 13, 20, 27 ஆகிய இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.