சூடானில் நிலைமை மோசம் இந்தியர் பாதுகாப்பில் கவனம்| The situation in Sudan is bad and Indians are focused on security

புதுடில்லி, சூடானில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே, சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. இதில், இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, செய்தியாளர்களிடம் நேற்றுகூறியதாவது:

சூடான் விவகாரம் தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா., பொதுச் செயலரை சந்திப்பார்.

இங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை. நிலைமைக்கு ஏற்ப இந்தியர்களை மீட்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ‘தலைநகர் கார்துாமில் உள்ள இந்திய துாதரகத்திற்கு அருகே, ராணுவத்திற்கு இடையே மோதல் நீடிப்பதால், துாதரகத்திற்கு இந்தியர்கள் யாரும் நேரில் வர வேண்டாம்’ என, இந்திய துாதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.