யுடியூபர் மீது பழிவாங்கும் நடவடிக்கை ஏன்?: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி| SC directs Tamil Nadu govt not to shift YouTuber Manish Kashyap from Madurai Central Prison

புதுடில்லி: வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பப்பட்ட விவகாரத்தில் யூடியூபர் மணீஷ் கஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது மதுரை சிறையில் உள்ள மணீஷ் கஷ்யப் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் பதிவான வழக்குகளை பீஹார் மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பிஎஸ் நரஷிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த்தா தவே, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மணீஷ் கஷ்யப் கைது செய்யப்பட்டது குறித்து தெரிவித்தார்.

இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த நீதிபதி சந்திரசூட் கூறுகையில், மனுதாரர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாரா? அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், சமூக வலைதளத்தில் அவரை 60 லட்சம் பேர்பின் தொடர்கின்றனர். அவர் அரசியல்வாதி. தேர்தலில் போட்டியிட்டு உள்ளார் என்றார்.

இதன் பின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மதுரை சிறையில் இருந்து மணீஷ் கஷ்யப்பை மாற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்ததுடன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.