Ajith: அந்த காரணத்தால் தான் அஜித்தை அஜித் சார்னு அழைக்கிறேன்: ராதாரவி

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் மீது திரையுலக பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் தனி மரியாதை உண்டு.

வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
தன்னை விட வயதில் சிறியவரான அஜித்தை நடிகர் ராதாரவி எப்பொழுதுமே அஜித் சார் என்று தான் அழைப்பார். இது குறித்து பேட்டி ஒன்றில் ராதாரவியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது,

மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் ஒரு கண் டாக்டர். 5 ஆயிரம் ஆபரேஷனுக்கு மேல அஜித் சார் பணம் கொடுத்திருக்கிறார் என விஜய் சங்கர் என்னிடம் சொல்லியிருக்கிறார். அதில் இருந்து தான் நான் அஜித் சார் என்று அழைக்க ஆரம்பித்தேன். இல்லைனா அஜித் குமார் தான்.

என் மச்சான் குமாரின் நண்பர் தான் அஜித். கண் தானம் பண்ணுவது பெரிய விஷயம். பலருக்கு கண் ஆபரேஷன் செய்ய உதவியதால் அவரை அஜித் சார் என்று கூப்பிடுகிறேன் என்றார்.

ராதாரவி தெரிவித்த அந்த விஷயம் குறித்து அஜித் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள். கண் ஆபரேஷன் செய்ய பலருக்கு நிதியுதவி செய்து வருகிறார் அஜித். ஆனால் வழக்கம் போன்று அதை வெளியே சொல்வது இல்லை.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவரிடம் உதவி பெற்றவர்கள் சந்தோஷத்தில் வெளியே சொன்னால் தான் அஜித் செய்யும் நல்ல காரியங்கள் குறித்து வெளியே தெரிய வருகிறது.

அண்மையில் லண்டன் விமான நிலையத்தில் பத்து மாத கைக்குழந்தையுடன் வந்த தமிழ் பெண் அஜித்தை பார்த்ததும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார். குழந்தையையும் தூக்கிக் கொண்டு, பையையும் தூக்கி வந்ததை பார்த்த அஜித் அந்த பெண்ணிடம் இருந்து பையை வாங்கி விமானம் வரை கொண்டு சென்றார்.

Ajith: அந்த பெண்ணின் கணவர் சொன்னதால் வெளியே வந்த உண்மை, இல்லைனா அஜித்தாவது…

சார், நீங்க போய் என் பையை தூக்கிக்கிட்டு பரவாயில்லை, நானே கொண்டு வருகிறேன் என அந்த பெண் சொன்னதற்கு எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், இது புரிகிறது என்று கூறியிருக்கிறார்.

விமானத்தில் ஏறியதும் அந்த பையை விமான பணிப்பெண்ணிடம் கொடுத்து அந்த தமிழ் பெண்ணின் இருக்கையில் பத்திரமாக வைக்குமாறு கூறியிருக்கிறார். உதவி பெற்ற அந்த பெண்ணின் கணவர் நடந்ததை சமூக வலைதளத்தில் தெரிவித்து அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்தார். அப்படித் தான் இந்த விஷயம் வெளியே வந்தது.

முன்னதாக அமர்க்களம் படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது ஷூட்டிங்ஸ்பாட்டில் வைத்து அவரை சந்தித்து தன் நண்பனின் மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்து உதவுமாறு பொன்னம்பலம் கேட்டிருக்கிறார்.

Ajith: இதய ஆபரேஷனுக்கு பணம் கேட்ட பொன்னம்பலம்: நெகிழ வைத்த அஜித்

பையன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை குறித்த விபரங்களை பெற்றுக் கொண்ட அஜித், ஷாட் ரெடி என இயக்குநர் கூறியதும் சென்றுவிட்டாராம். அவர் ஒன்றுமே சொல்லாமல் சென்றதுடன் திரும்பி வந்ததும் தன் வேலையை பார்த்திருக்கிறார்.

நாம் உதவி கேட்டதை மறந்துவிட்டார் போன்று என பொன்னம்பலம் நினைவூட்ட, நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க. நீங்க சொன்னபோதே பில்லை கட்டிவிட்டேன் என்று கூறி அவரை நெகிழ வைத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.