சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கூட இப்படி இல்லையே இப்போ என்ன திடீரென உடல் எடை மெலிந்து காணப்படுகிறார் என ரசிகர்களே ஷாக் ஆகி உள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்டில்லை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரது அதிரடி மாற்றத்தை பார்த்து உடம்புக்கு ஒன்னும் இல்லையே என நலம் விசாரித்து வருகின்றனர்.
சினிமாவில் பிஸி: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. குத்தாட்டம் ஆடுவது, பிரசாந்தின் அந்தகன் படத்தில் முக்கிய ரோல், பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் ஒரு படம், ஹரி நாடார் உடன் ஒரு படம் என பல படங்கள் வரிசை கட்டின.
ஒரு படத்தில் வக்கீலாகவும், ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து மிரட்டி வரும் வனிதா விஜயகுமார் புதிதாக நடித்து வரும் படத்தில் இருந்து ஒரு ஸ்டில்லை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
காசிமேட்டில் வனிதா விஜயகுமார்: வைஜெயந்தி எனும் போலீஸ் அதிகாரியாக புதுப்படத்தில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் காசிமேட்டில் உள்ள மீன்ப்பிடி துறைமுகத்தில் செம மாஸாக நிற்கும் பக்கா போஸ் கொடுத்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நம்ம வனிதா அக்காவா இப்படி மாறிட்டாங்க என வாய் பிளந்து கமெண்ட்டுகளையும் ஹார்டீன்களையும் ஃபயர் எமோஜிக்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.
துரும்பா இளைச்சுட்டிங்க: வகை வகையா சமைத்து சாப்பிட்டு சும்மா புசு புசுவென இருந்த நடிகை வனிதா விஜயகுமாரா இது? என்றும் ஏன் மேடம் துரும்பா இளைச்சுட்டிங்க என நெட்டிசன்கள் நலம் விசாரிக்கும் ஆரம்பித்து விட்டனர்.
செம ஃபிட்டா இருக்கீங்க அக்கா இனிமே நிறைய படம் பண்ணுவீங்க துணை கமிஷனரா தூள் கிளப்புங்க என வனிதா விஜயகுமாரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துக்கு ரசிகர்கள் ஹார்ட்டீன் மற்றும் ஃபயர் எமோஜிக்களை போட்டுத் தாக்குகின்றனர்.