ஹீரோ பேஸன் பிளஸ் Vs ஹோண்டா ஷைன் 100 எந்த பைக் வாங்கலாம் ?

100cc பிரிவில் உள்ள பைக்குகளில் மீண்டும் சந்தைக்கு வந்துள்ள ஹீரோ பேஸன் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா அறிமுகம் செய்த ஷைன் 100 என இரண்டு பைக் மாடல்களையும் ஒப்பீடு செய்து எந்த பைக் சிறந்த வசதிகள் மற்றும் மைலேஜ் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பிளாட்டினா 100, ஹோண்டா ஷைன் 100 போன்ற மாடல்களுடன் ஹீரோ நிறுவனத்தின் HF 100, HF டீலக்ஸ், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகளை பேஷன் ப்ளஸ் 100 எதிர்கொள்ள உள்ளது.

2023 Hero Passion Plus Vs Honda Shine 100

100-110cc சந்தையின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் சில வருடங்களுக்கு முன்னதாக பேஸன் பிளஸ் பைக்கினை நீக்கியிருந்த நிலையில், தொடர்ந்து பழைய வடிவத்தை தக்கவைத்துக் கொண்டு புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்ய உள்ளது.

தற்பொழுது பேஸன் புரோ மற்றும் பேஸன் புரோ Xtech என இரண்டு வேரியண்டுகள் 113.2 cc என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. முந்தைய பேஸன் பிளஸ் பைக் புதிதாக மூன்று விதமான நிறங்களில் வரவுள்ள நிலையில் பிரசத்தி பெற்ற ஹீரோ 97.2cc என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஷைன் 100 பைக்கில் 100cc என்ஜின் வழங்கப்பட்டு 99.7 சிசி  ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7.5 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Specs Hero Passion + Honda Shine 100
என்ஜின் 97.2cc 99.7cc
அதிகபட்ச பவர் 7.91 bhp at 8,000 rpm 7.5 bhp
அதிகபட்ச டார்க் 8.05 Nm at 6000 rpm 8.05 Nm
கியர்பாக்ஸ் 4 ஸ்பீடு 4 ஸ்பீடு
விலை ₹ 66,000 (expect) ₹ 64,900

 

மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் பொதுவாக அனைத்தும் HF டீலக்ஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் இருந்து பெறப்பட்ட பாகனங்களை கொண்டே பேஸ்ன் பிளஸ் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Shine 100 Hero Passion Plus
வீல்பேஸ் 1245mm 1270mm
இருக்கை உயரம் 786mm 785mm
கிரவுண்ட்
கிளியரண்ஸ்
168mm 180mm
எரிபொருள் டேங்க் 9 litres 10 litres
Kerb weight 99kg 112kg
சஸ்பென்ஷன் (F/R) Telescopic fork/ Twin shocks Telescopic fork/ Twin shocks
பிரேக் (F/R) 130 mm Drum/ Drum 130mm Drum/ 130mm Drum
டயர் (F/R) 2.75-17/ 3.00-17 80/100-18/ 80/100-18

2023 ஹீரோ பேஸன் பிளஸ் பவர் மற்றும் டார்க் விபரம் ?

ஹீரோ பேஸன் பிளஸ் 100 பைக்கில் உள்ள 97.2cc என்ஜின் அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் at 6000 rpm. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

2023 Hero Passion Plus பைக் விலை எவ்வளவு ?

புதிய ஹீரோ பேஸன் பிளஸ் 100 விலை ரூ.66,000 முதல் துவங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.