கனேடிய பெண் ஒருவர், இரவில் விடாமல் நாய் குரைப்பதைக் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றிருக்கிறார்.
கண்ட எதிர்பாராத காட்சி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் Sharon Rosel என்னும் பெண், இரவு 3.00 மணிவாக்கில் பயங்கரமாக நாய் குரைப்பதைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.
அப்போது, கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் கதவு திறந்திருப்பதை அவர் கவனித்துள்ளார். யார் கதவைத் திறந்தது என்று பார்க்க அவர் செல்ல, அப்போதுதான், கார் கதவைத் திறந்தது மனிதர்கள் அல்ல என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது.
கார் கதவின் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் கிடக்க, கரடி ஒன்று Sharon தனது காருக்குள் வைத்திருந்த சோடா கேன்களை எடுத்து குடித்துக்கொண்டிருந்திருக்கிறது.
Sharon தனது காருக்குள் 72 சோடா கேன்களை வைத்திருந்திருக்கிறார். அவற்றில் 69 கேன்களை அந்தக் கரடி காலி செய்துவிட்டதாம்.
கரடியைத் துறத்துவதற்காக, மாடியிலிருந்து, அதன் மீது தண்ணீரை வீசி அடிப்பது முதல் என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார் Sharon. ஆனால், கரடி அசைந்தபாடில்லையாம். அது தன் வேலையை முடித்தபிறகுதான் அங்கிருந்து சென்றுள்ளது.
அந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் Sharon பகிர்ந்த புகைப்படங்கள் வேகமாக பகிரப்பட்டுவருகின்றனவாம்!