ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Flip Phone இப்போது ஸ்மார்ட்போன் உலகில் அதிகரித்துவருகிறது.
மோட்டோரோலா நிறுவனம்
தொடங்கி சாம்சங், ஒப்போ, கூகுள் என பல நிறுவனங்கள் புதிய போல்டு வகை போன்களில் கவனம் செலுத்துகின்றன. இதில் புதிதாக Vivo நிறுவனம் அதன் முதல் Flip வகை போனை மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இரண்டாவது ஜெனெரஷன் X Fold 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vivo X Flip விவரம் (vivo flip specs)டிஸ்பிளே
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு பக்கங்களிலும் திரை இருக்கின்றன. இதன் முக்கிய திரை அளவு 6.7 இன்ச் AMOLED (2520 x 1080 Pixels) மற்றும் 120HZ Refresh Rate கொண்டுள்ளது. இதன் பின்பக்கம் 3 இன்ச் அளவில் 682×422 Pixel resolution, 60HZ Refresh Rate உள்ள இரண்டாவது ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது.
டிசைன் விவரம்இந்த ஸ்மார்ட்போன் Galaxy Flip மற்றும் Oppo Flip ஆகிய போன்களுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும். இந்த போனில் அந்த போன்களில் இருப்பது போலவேClamshell டிசைன்உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை Vivo நிறுவனம் இந்தியாவில் அதன் பிரீமியம் X90 சீரிஸ் போன் வெளியானதும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறன் வசதிவிவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்காக Qualcomm நிறுவனத்துடன் இணைந்து அதன் பிரீமியம் வகை Snapdragon 8+ Gen 1 சிப் வசதியை வழங்கியுள்ளது. இதே சிப் Galaxy Z fold மற்றும் Z Flip 4 ஆகிய ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் புதிய Snapdragon 8 Gen 2 சிப் இடம்பெறாதது சற்று பின்னடைவு.
கேமரா வசதிகள்இதில் கேமரா வசதிகளாக Zeiss நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய 50 MP முக்கிய கேமரா வசதி, 12MP அல்ட்ரா வைட் கேமரா இடம்பெற்றுள்ளது. முன்பக்கம் 32MP செல்பி கேமரா உள்ளது.
பேட்டரிபோனில் ஒரு பெரிய 4440mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் நமக்கு சிறந்த சார்ஜிங் திறன் இதில் கிடைக்கும்.
விலை விவரம் (Vivo Flip Price)இந்த போன்இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முதல் ஸ்டோரேஜ் மாடலான 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 5,999 yen (இந்திய விலையில் 71,600 ரூபாய்), 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் மாடல் 6,699 Yen (இந்திய ரூபாயில் 80,000 ஆயிரம் ரூபாய்) விலையில் கிடைக்கிறது. இது Purple, Black, Gold ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்