Sachin on Suriya – முதலில் கூச்சமாக இருந்தது பிறகு நன்றாக இருந்தது – சூர்யா பற்றி சச்சின் பகிர்ந்த சுவாரஸ்யம்

சென்னை:
Sachin
Tendulkar
On
Suriya
(சூர்யா
குறித்து
சச்சின்
டெண்டுல்கர்)
சூர்யாவை
சந்தித்தது
குறித்து
சச்சின்
டெண்டுல்கர்
ரசிகரிடம்
கூறியது
சமூக
வலைதளங்களில்
ட்ரெண்டாகியுள்ளது.

சூர்யா
இப்போது
தனது
42ஆவது
படத்தில்
நடித்துவருகிறார்.
படத்துக்கு
கங்குவா
என
பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர்
சிறுத்தை
சிவா
இயக்கத்தில்
பத்து
மொழிகளில்
3டி
தொழில்நுட்பத்தில்
இந்தப்
படமானது
வெளியாகிறது.
ஸ்டூடியோ
க்ரீன்
சார்பில்
ஞானவேல்
ராஜா
படத்தை
தயாரிக்கிறார்.
இதன்
ஷூட்டிங்
இப்போது
கொடைக்கானலில்
நடப்பதாக
கூறப்படுகிறது.


மும்பையில்
செட்டில்:

இதற்கிடையே
சூர்யா
மும்பையில்
செட்டில்
ஆகிவிட்டதாக
கூறப்பட்டது.
மேலும்
ஜோதிகாவின்
வலியுறுத்தலின்
பேரில்
மும்பையில்
வீடு
ஒன்றை
சூர்யா
வாங்கிவிட்டார்.
அதற்கு
ஹிந்தியில்
பெயர்
வைக்கப்பட்டுள்ளது
என்றும்
தகவல்கள்
தீயாக
பரவின.
அதுமட்டுமின்றி
மும்பையில்
தனது
வீட்டில்
சூர்யா
இருக்கும்
வீடியோவும்
சமூக
வலைதளங்களில்
வெளியாகி
ட்ரெண்டாகியுள்ளது.


சச்சினுடன்
சந்திப்பு
:
சூழல்
இப்படி
இருக்க
சச்சின்
டெண்டுல்கரின்
பக்கத்தில்
பவ்யமாக
நின்றப்படி
எடுத்துள்ள
போட்டோவை
தனது
சமூக
வலைதள
பக்கத்தில்
ஷேர்
செய்த
சூர்யா,
அன்பும்
மரியாதையும்
என
கேப்ஷன்
கொடுத்துள்ளார்.
இந்த
சந்திப்பு
மும்பையில்
நடைபெற்றதாக
கூறப்பட்டது.
அந்தப்
புகைப்படத்தை
சூர்யாவின்
ரசிகர்கள்
ட்ரெண்டாக்கி
சமூக
வலைதளத்தில்
அதகளம்
செய்தனர்.


கூச்சமாக
இருந்தது:

இந்நிலையில்
சூர்யாவடனான
சந்திப்பு
குறித்து
சச்சின்
டெண்டுல்கர்
மனம்
திறது
பேசியிருக்கிறார்.
அவர்
சமூக
வலைதளத்தில்
ரசிகர்களுடன்
உரையாடினார்.
அப்போது
ரசிகர்
ஒருவர்
சூர்யாவும்,
சச்சினும்
இருக்கும்
புகைப்படத்தை
பகிர்ந்து
இதுகுறித்து
சொல்லுங்கள்
என
கேட்டிருந்தார்.

Sachin Tendulkar Opens Up About Actor Suriya

அதற்கு
பதிலளித்த
சச்சின்,
“நாங்கள்
இருவரும்
ஆரம்பத்தில்
ரொம்பவே
கூச்சமாக
இருந்தோம்.
ஒருவரையொருவர்
தொந்தரவு
செய்துகொள்ள
விரும்பவில்லை.
ஆனால்
இறுதியில்
இருவருமே
நன்றாக
பேசிக்கொண்டோம்
என
குறிப்பிட்டிருந்தார்.


சூர்யாவின்
அடுத்த
படங்கள்:

சூர்யா
இப்போது
கங்குவா
படத்தில்
நடித்துவருகிறார்.
அந்தப்
படத்தை
முடித்துவிட்டு
வெற்றிமாறனின்
வாடிவாசலுக்கு
செல்லவிருக்கிறார்.
அதனைத்
தொடர்ந்து
ஜெய்
பீம்
இயக்குநர்
ஞானவேல்
இயக்கத்தில்
ஒரு
படமும்,
சூரரைப்
போற்று
இயக்குநர்
சுதா
கொங்கரா
இயக்கத்தில்
ஒரு
படத்திலும்
சூர்யா
நடிக்கவிருக்கிறார்.
மேலும்,
ஹரி
இயக்கத்திலும்
சூர்யா
நடிப்பார்
எனவும்
சமீபமாக
தகவல்
பரவிவருவது
குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.