பிரதமர் மோடி அடுத்த ஒருவாரத்தில் ஏழு நகரங்களில் 36 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நாளை அவர் தொடங்கி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து கஜூராவோவுக்கு மோடி பயணம் செய்கிறார். 25ந் தேதி கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். அங்கிருந்து குஜராத் மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் சூரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.