பிடிஆர் வீட்டு விருந்தை புறக்கணித்த ''தந்தை – மகன்''… விஷ்வரூபம் எடுக்கும் ஆடியோ விவகாரம்..?

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்த நிலையில் முதல்வரின் விரிவான அறிக்கையை தொடர்ந்து தேதி குறிப்பிடமால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டில் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்த விருந்து கடைசி நிமிடத்தில் நின்றுபோனதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி ரூபாரிடம் பேசியதான ஒரு ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டுருந்தார். அதில், உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களது முன்னோர்கள்கூட சம்பாதிக்காத தொகையை ஒரே ஆண்டில் சம்பாதித்துள்ளனர். அந்த பணத்தை எப்படி வைத்திருப்பது என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 10 கோடி 20 கோடின்னு சுமார் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ளனர் என்று பதிவாகியிருந்தது.

இது திமுகவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்த, எதிர்கட்சிகளுக்கு வலுசேர்க்கும் ஆதாரமாகவும் மாறியது. தொடக்கத்தில் இந்த ஆடியோ குறித்து அரசியல் அரங்கில் விமர்சனங்கள் குவிய தொடங்கின. ஆனால், பழனிவேல் தியாகராஜன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அது தன்னுடைய குரல் இல்லை என்றுகூட அவர் சொல்லவில்லை. விஷயம் பெருசாகிக்கொண்டே சென்றதால் நேற்றைய தினம் பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.

BJP-ஆ, நாம் தமிழரா? சவுக்கு எந்த கட்சி ? – சவுக்கு சங்கர்

அதில், அந்த ஆடியோ புனையப்பட்டுள்ளது. அதை நான் கடந்து செல்ல விரும்புகிறேன். புகார் எதுவும் கொடுக்கப்போவதில்லை. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து ஆடியோ, வீடியோக்கள் வருவதில் ஆச்சரியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆடியோ விவாகரத்துக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைப்பார் என்று பார்த்தால் இந்த விளக்கம் மேலும் பூதாகரமாகியுள்ளது. அந்த ஆடியோவின் உண்மை தண்மையை ஆராய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ஆகியோர் டெல்லி உதவியை நாடியுள்ளனர்.

இந்த நிலையில், பிடிஆர் ஆடியோவால் முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறும் சவுக்கு சங்கர், அமைச்சர் பிடிஆர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் புறக்கணித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதுபற்றி அவர் போட்டுள்ள ட்வீட்டில், பட்ஜெட் முடிந்ததும் நிதியமைச்சர் பி.டி.ஆரின் வீட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விருந்து கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த விருந்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல, இந்தாண்டும் இரவு விருந்து இன்று நடைபெற இருந்தது. ஆனால், பி.டி.ஆர் வீட்டில் நடந்த விருந்தில் பங்கேற்க முதல்வர் மற்றும் அவரது மகன் இருவரும் அக்கறை காட்டாததைத் தொடர்ந்து கடைசி நிமிடத்தில் இரவு உணவு ரத்து செய்யப்பட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.