சென்னை: தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள யாத்திசை என்ற திரைப்படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
வரலாற்றுப் பின்னணியில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், யாத்திசை படத்திற்கு ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.
ப்ளு சட்டை மாறனின் விமர்சனம் மட்டும் இல்லாமல், இந்த வீடியோவின் கீழே நெட்டிசன்கள் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
யாத்திசை ப்ளு சட்டை மாறன் விமர்சனம்:மெகா பட்ஜெட் படங்களுக்கே தண்ணீ காட்டியுள்ளது தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள யாத்திசை. பல கோடி ரூபாய் செலவில் உருவான பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற ஹிஸ்டாரிக்கல் ஜானர் படங்களுக்கு நடுவே, மினிமம் பட்ஜெட்டில் மரண மாஸ் காட்டியுள்ளது யாத்திசை. 21ம் தேதி வெளியான இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், இரண்டு நாட்களில் 1.5 கோடி வரை வசூலும் செய்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு ப்ளு சட்டை மாறனும் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். வழக்கமாக கதையில் சின்னதாக சொதப்பல் இருந்தாலே வெளுத்து வாங்கும் ப்ளு சட்டை மாறன், யாத்திசை படத்துக்கு பாசிட்டிவாகவே விமர்சனம் செய்துள்ளார். மேக்கிங், கதை, திரைக்கதை, நடிகர்கள், அவர்கள் பேசும் பழங்கால தமிழ், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் பாராட்டியுள்ளார்.
மெகா பட்ஜெட் படங்களுக்கே தண்ணீரை காட்டியுள்ளது தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள யாத்திசை. பல கோடி ரூபாய் செலவில் உருவான பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற ஹிஸ்டாரிக்கல் ஜானர் படங்களுக்கு நடுவே, மினிமம் பட்ஜெட்டில் மரண மாஸ் காட்டியுள்ளது யாத்திசை. 21ம் தேதி வெளியான இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், இரண்டு நாட்களில் 1.5 கோடி வரை வசூலும் செய்துள்ளது.
அதில் முதலில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் தாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் தாக்கப்படும் என்று நினைத்தே இந்த ரிவ்யூ பார்க்க வந்த ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் என ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ப்ளு சட்டை மாறன் குழப்பிய குழப்பத்தில், படம் நல்லா இருக்கா இல்லையா என்று தெரியாமல் குழம்பி போய் இருப்பவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.
இதற்கெல்லாம் சவால் விடும் வகையில், எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வாழ்த்துகள் என ஒருவர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். அதேபோல், இரவின் நிழல் வெற்றிப் படமாக நினைத்து கொண்டிருக்கும் பார்த்திபன் சார்பாக வெற்றி பெற வாழ்த்துகள், தலைவர் ரிவ்யூ பார்த்தால் படம் பார்க்கும் மூடு போய்விடும் என்ற குழப்பத்தில் இந்த விடியோ கிளிக் செய்த சங்கத்தினர் சார்பாக ரிவ்யூ வெற்றிபெற வாழ்த்துகள்.
ஏழரை சனியில் அவதிபடும் மகர ராசி சார்பாக படம் வெற்றிப் பெற வாழ்த்துகள். போறபோக்குல பொன்னியின் செல்வன் படத்தை கலாய்த்த நீல சட்டை சங்கம் சார்பாக வாழ்த்துகள். சச்சின் டெண்டுல்கரின் வருங்கால மாப்பிள்ளை கில் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். ரம்ஜான் பிரியாணிகாக வெயிட் பண்ணிட்டு இருக்கும் நபர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றெல்லாம் பதிவிட்டு, யாத்திசை படத்துக்கு வைப் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.