உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று (ஏப்.,24). மனதை – தூய்மையாக முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய். அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கடப்ப ராஜு – ஈஸ்வரம்மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.
1940, மார்ச் 8: சாய்பாபா தனது 14வது வயதில், புட்டபர்த்திக்கு அருகே உள்ள உரவகொண்டா என்ற இடத்தில் தேள் கடித்து மயக்கமடைந்தார். மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார், அழுதார், பாடினார். அவரது செயல்கள் புரியாத புதிராக இருந்தன. அன்று முதல் அவரது வாழ்க்கை திசை மாறியது என்கிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு.
1940, மே 23: சாய்பாபா தனது பெற்றோர், சகோதரர்களை அழைத்தார். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து இனிப்பு, விபூதி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்து கொடுத்தார். தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து பிரம்பை எடுத்து, ‘யார் நீ, உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு சாய்பாபா, ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்’ என்றார். அன்று முதல் சத்யநாராயண ராஜு, சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.
1944: சாய்பாபா, குடும்பத்தில் இருந்து பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப்பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொடங்கினார். ஆன்மிக பயணமாக பெங்களூருக்கு சென்றார். தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி கட்டியிருந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார்.
1950, நவம்பர் 23: புட்டபர்த்தியில் றிபிரசாந்தி நிலையம்றீ என்ற பிரமாண்ட ஆசிரமம் கட்டி, சாய்பாபா தனது 28வது பிறந்த நாளில் திறந்து வைத்தார்.
1957, அக்டோபர்: பிரசாந்தி நிலைய வளாகத்தில் இலவச மருத்துவமனையை திறந்தார்.
1968, ஜூன் 29: சாய்பாபா, முதன் முதலாக ஆன்மிக பயணமாக நமிபியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.
1968, ஜூலை 22: ஆந்திர மாநிலம், அனந்தபூரில் மகளிர் கல்லூரியை திறந்து வைத்தார்.
1968: மும்பையில் ஆன்மிகம் மற்றும் சமுக சேவைக்காக தர்மஷேத்ரா அல்லது சத்யம் மந்திர் ஒன்றை நிறுவினார்.
1972: ஆன்மிக மற்றும் சமுக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார்.
1973: ஐதராபாத்தில் சிவம் மந்திர் நிறுவினார்.
1981, நவம்பர் 22: புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
1981: சென்னையில் சுந்தரம் மந்திர் நிறுவப்பட்டது.
1993, ஜூன் 6: பாபாவின் படுக்கை அறைக்குள் திடீரென மர்ம நபர்கள் நுழைந்து அவரை தாக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், ஆசிரமத்தின் தொண்டர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆசிரம தொண்டர்கள் 2 பேரும் பலியானார்கள்.
1995, மார்ச்: ஆந்திர மாநிலத்தில் வறண்ட பிரதேசமாக ராயலசீமா பகுதியில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார்.
1999: மதுரையில் ஆனந்த நிலையம் மந்திர் நிறுவினார்.
2001: ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பெங்களூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனையை நிறுவினார்.
2005: உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி, அருளாசி வழங்கத் தொடங்கினார்.
2006: இரும்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய்பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
2011, மார்ச் 28: மூச்சு திணறல் காரணமாக, புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவமனையில் சத்ய சாய்பாபா சேர்க்கப்பட்டார்.
2011, ஏப்ரல் 24: ஞாயிற்றுக்கிழமை காலை 6.25 மணியளவில் சத்ய சாய்பாபா காலமானார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆசிரமத்தில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்