ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ajith Kumar son:அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்தாட்ட போட்டியை காண சென்றாலும், கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றாலும் ராஜ மரியாதை தான்.
அமர்க்களம்அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் கத்தியை வைத்து ஷாலினி கையை கீறிவிட்டார் அஜித். ரத்தம் வந்ததை பார்த்து ஷாலினி கத்தி கலாட்டா பண்ணவில்லை. தெரியாமல் கத்தி பட்டுவிட்டது பரவாயில்லை என்று மட்டும் கூறியிருக்கிறார். இந்த வயதில் இவ்வளவு நிதானமா என அஜித் குமார் இம்பிரஸ்ஸாகி ஷாலினி மீது காதலில் விழுந்தார்.
23 ஆண்டுகள்அஜித் குமார், ஷாலினியின் திருமணம் கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்றது. அவர்களுக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் அஜித், ஷாலினிக்கு திருமணமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று போன்று என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என சினிமா ரசிகர்கள் அஜித், ஷாலினியை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆத்விக்அஜித், ஷாலினியின் திருமண நாளான இன்று அவர்களின் செல்ல மகன் ஆத்விக் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை பார்க்க அம்மா, அக்கா, மாமா ரிச்சர்ட் ரிஷியுடன் வந்திருந்தார் ஆத்விக். அந்த போட்டியை காண வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆத்விக்கை பார்த்ததும் அவருக்கு கை கொடுத்து நலம் விசாரித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகிவிட்டது.
ரசிகர்கள்முதல்வர் ஸ்டாலின், குட்டி தல இருக்கும் புகைப்படத்தை பலரும் இன்று ஷேர் செய்து வருகிறார்கள். முன்னதாக சென்னையின் எஃப்.சி. அணி விளையாடிய கால்பந்தாட்ட போட்டியை காண அம்மா ஷாலினியுடன் சென்றார் ஆத்விக். அப்பொழுது சென்னை அணியின் இணை உரிமையாளரான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வந்து ஷாலினியிடம் பேசியதுடன், ஆத்விக்குடனும் பேசினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.
Ajith: அஜித்தை உரிச்சு வச்சிருக்கும் மகன் ஆத்விக், தல மாதிரியே ஃபுட்பால் ரசிகன்: வைரல் வீடியோ
தல மகன்கால்பந்தாட்ட போட்டியை பார்க்கச் சென்றால் அணியின் உரிமையாளர் வந்து பேசுகிறார். ஐபிஎல் போட்டியை காண சென்றால் முதல்வரே வந்து கை கொடுக்கிறார். குட்டி தல இப்பொழுதே பெரிய ஆளாகிவிட்டார். அஜித்தை பொது இடங்களில் பார்க்க முடியவில்லை. அந்த குறையை குட்டி தல தீர்த்து வைக்கிறார் என அஜித் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
ஏ.கே. 62Ajith: அந்த பெண்ணின் கணவர் சொன்னதால் வெளியே வந்த உண்மை, இல்லைனா அஜித்தாவது…கெரியரை பொறுத்தவரை மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இந்நிலையில் லண்டன் விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் பையை விமானம் வரை தூக்கிச் சென்று உதவியிருக்கிறார் அஜித். அந்த பெண்ணின் கணவர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டார். அதை பார்த்த அனைவரும் அஜித்தின் நல்ல குணத்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.