கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் டாம் சயர் தீவில் உள்ள அனாஹேய்ம்மில் டிஸ்னிலேண்டிற்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.
இதில் உள்ள ஹோட்டலில் ‘பேண்டமிக்’ என்ற நாடக நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்து கொண்டிருந்து.
அப்பொழுது ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் காயமோ, உயிர் பலியோ ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. கடந்த 1956ம் ஆண்டு முதல் டாம் சயர் தீவில் டிஸ்னிலேண்ட் இயங்கி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement