தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 5ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் எனவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பிறகு வெளியிட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.