சென்னை : என் குடிப்பழக்கத்தால் எல்லாமே போச்சு என்று புதுப்பேட்டை படத்தில் நடித்த சுரேஷ் உருக்கத்துடன் பேட்டி கொடுத்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் புதுப்பேட்டை. பிளாட் பஸ்டர் ஹிட்டடித்த இத்திரைப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகும்.
இப்படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வரும் தனுஷிற்கு குருவாக நடித்தவர் தான் சுரேஷ்.அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
புதுப்பேட்டை சுரேஷ் : அதில்,என் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர்கள் மூலமாகத்தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையே வந்தது. அவர் தான் உனக்கு டான்ஸ் நல்ல வருது என்று கூறி நடன இயக்குநர் புலியூர் சரோஜா வீட்டிற்கு டான்ஸ் கற்றுக்கொள்ள அனுப்பினார். புலியூர் சரோஜா, இப்போது டான்ஸ் கற்றுக்கொடுப்பதை நிறுத்திவிட்டதால், லலிதா மணி மாஸ்டரிடம் அனுப்பினார். அவர் தான் எனக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்து யூனியன் கார்டையும் எடுத்துக்கொடுத்தார்.
பல படங்களில் டான்ஸ் : நான் முதல் முதலில் கழுகுமலை கள்ளன் படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடினேன். அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒத்தடி ஒத்தடி கொஞ்சம் ஓரமா ஒத்தடி பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். அதன்பிறகு கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், பிரபு தேவா என அனைத்து நடன மாஸ்டர் டான்ஸ் குரூப்பிலும் நான் இருந்து நிறைய சம்பாதித்தேன்.
செல்வராகவன் மறக்கவில்லை : டான்சராக பல வருடம் பீல்டில் இருந்து இருக்கிறேன் என்னை யாருக்குமே தெரியாது, ஆனால் புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தான், என்னை பலருக்கும் தெரிந்தது பலரும் என்னிடம் வந்து போட்டோ எடுத்துக்கொண்டார்கள். காதல் கொண்டேன் படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடியபோது , செல்வராகவன் புதுப்பேட்டை படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார். காதல் கோட்டை படம் வெளியாகி இரண்டு வருடத்திற்கு பிறகுதான்புதுப்பேட்டை படம் எடுத்தார்கள் அப்போது, செல்வராகவன் சார் என்னை மறக்காமல் நினைவில் வைத்து வாய்ப்பு கொடுத்தார்.
எல்லாமே போச்சு : அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் நிறை வாய்ப்புகள் வந்தன, ஆனால்,என் குடிப்பழக்கத்தால் எல்லாமே போச்சு, பயங்கரமாக குடிப்பேன் எனக்கு 16 வயதில் இருந்தே இந்த குடிப்பழக்க இருக்கு, அந்த பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் ஒரு நல்ல நடிகனாக வளர்ந்து இருப்பேன். இப்போ ஒன்றரை ஆண்டாக தான் குடியை விட்ருக்கேன்.
இப்போ தான் எல்லாவற்றையும் யோசிக்கிறேன். இப்போ சினிமாவில் வர எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க என்பதை பார்க்கும் போது தான். புத்தி இல்லாமல் இப்படி நடந்து கொண்டோமே என்பது புரிகிறது என்று புலம்பினார் புதுப்பேட்டை சுரேஷ்.