தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கப் போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் கூறியுள்ளார்.
அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அல்பனிஸ், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா – சீனா இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவித்தார்.