மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான உடனடி தொலைபேசி சேவை ஒன்றை இந்தியாவில் உள்ள அப்பலோ மருத்துவமனை மற்றும் அந்நாட்டின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.
நாட்டில் வாழும் எந்தவொரு நபருக்கும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக ” Help Line For Free Medical” என்ற ஹொட்லைன் சேவையொன்று அண்மையில் ஆரம்பித்த வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் கொள்ளுப்பிட்டி சுற்றுலா விடுதியில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அழைப்பு சேவை மற்றும் சிகிச்சை சேவையானது இந்தியாவில் உள்ள ‘அப்போலோ’ மருத்துவமனை மற்றும் இலங்கையில் உள்ள அதன் அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த அழைப்பு சேவையின் மூலம், இந்நாட்டில் வசிக்கும் குடிமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, இந் நாட்டில் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், நோயாளிகள் இந்தியாவில் உள்ள சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இலக்கம் 466, காலி வீதி, கொழும்பு 03. முகவரியில் இந்த தொலைபேசி மையம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 0773679122 ஃ 07775 28 588 ஃ 0777719558 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியம்.
இந்த நிகழ்வில் இந்தியாவின் அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ஜித்து ஜோஸ், இலங்கை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிறைவேற்று அதிகாரி நில்மினி விதாரண உட்பட பலரும் கலந்துகொண்டனர்.