வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டாக்கா: வங்கதேச நாட்டின் புதிய அதிபராக முகம்மது ஷகாபுதீன்73 பதவியேற்றார்.
வங்க தேச அதிபராக இருந்த அப்துல் ஹமீத் பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரியில் துவங்கின.
ஆளும் அவாமிக் லீக் கட்சி சார்பில் முகம்மது ஷகாபுதீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
![]() |
இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று டாக்கா அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் வங்கதேச நாட்டின் 22-வது அதிபராக பதவியேற்றார். அவருக்கு பாராளுமன்ற சபாநயகர் ஷெரீன் ஷர்மின் சவுத்ரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் ஷே க் ஹசீனா, இவரது அமைச்சரவை குழுவினர், மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். புதிய அதிபர் முகமது ஷகாபுதீனுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement