12 மணி நேர வேலை: திமுகவை பொளந்துவிட்ட பாஜக.. அப்போ நமக்கு நல்லது தான்.!

12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற்றதால், பாஜக ஆதரவாளர் அரசை விமர்சனம் செய்துள்ளார்.

12 மணிநேர வேலை சட்டம் இயற்றப்பட்ட நாள் கருப்பு நாள்- பிஆர் பாண்டியன்

திமுக அரசின் மீதிருந்த நற்பெயரையும், 12 மணி நேர வேலை திட்டம் கெடுத்துவிட்டது. வேங்கைவயல் பிரச்சனை, நெய்வேலி பிரச்சனை என மக்கள் கொதித்தெழுந்தாலும், 12 மணி நேர வேலை திட்டம் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. தனியார் தொழில்நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதை திமுக கூட்டணிகட்சிகளே கடுமையாக எதிர்த்தன. உழைப்பாளர்களை சுரண்டும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமையை, பெரும் தொழில்நிறுவனங்களுக்காக தாரைவார்த்தாதக கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. திமுக ஆதரவு நெட்டிசன்களும் இதை கடுமையாக எதிர்த்தனர்.

12 மணி நேர வேலை

தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும் நிறுவனங்கள் 12 மணி நேர வேலையை எதிர்பார்ப்பதால், தமிழ்நாடு அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியதும் பெரும் சர்ச்சையானது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர தூக்கம் மற்றும் 8 மணி நேர உறவுகளுக்காக என பல்வேறு நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பின் ஒதுக்கப்பட்ட உரிமையை திமுக அரசு பறிகொடுத்ததாக கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் திமுகவின் தாய் கழகமான திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்வினை ஆற்றின.

அதேபோல் இந்த மசோதாவை திரும்ப பெறுமாறும் அழைப்பு விடுத்தன. ஆனால் 12 மணி நேர வேலை மசோதாவை ஆதரித்த ஒரே கட்சி பாஜக தான். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிரான மனநிலை உள்ளது. பாஜக ஆதரிக்கும் அனைத்துமே மக்களுக்கு எதிரானவையே என்ற மனநிலையே தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. உதாரணத்திற்கு சிஏஏ,

, தேசிய கல்வி கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களை தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்த்தன.

சுமந்த் கொதிப்பு

ஆனால் 12 மணி நேர வேலை திட்டத்தை மட்டும் பாஜக ஆதரவாளர்கள் ஆதரித்தனர். ஏனெனில் இந்தியாவில் பாஜக அறிமுகப்படுத்தியது தான் 12 மணி நேர வேலை திட்டம். அப்போது எதிர்கட்சியாக இருந்த முக ஸ்டாலின் கடுமையாக எதிர்த்ததும், ஆட்சிக்கு வந்ததும் அதை அமல்படுத்தியும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்த சூழலில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து பாஜக ஆதரவாளர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘முதுகெழும்பு இல்லாத அரசு. நிறைவேற்றப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே திரும்ப பெற்ற அவலம். 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற்றதால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்லும்’’ என பதிவிட்டுள்ளார். ஆனால் பாஜகவே இப்படி செல்வதால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல விஷயம் தான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.