பிரான்ஸின் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கார் ஒன்று தறிகெட்டு புகுந்ததில் 11 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சர்வதேச பட்டம் விடும் திருவிழா
சனிக்கிழமை வடக்கு பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
பிரான்ஸின் பெர்க் நகரில் நடைபெற்ற இந்த பட்டம் விடும் திருவிழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
At least 11 people have been injured after a car drove into a crowd at an international kite-flying festival in northern France on Saturday.
Initial reports suggested that an elderly driver lost control of their vehicle and collided into pedestrians in the town of Berck. pic.twitter.com/ILYS1dDIyQ
— NEXTA (@nexta_tv) April 23, 2023
அப்போது சாலையில் சென்று கொண்டு இருந்த கார் ஒன்று தறிகெட்டு திடீரென திருவிழா கூட்டத்துக்குள் புகுந்தது.
இதில் 11 பேர் வரை காயமடைந்த நிலையில், கார் மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.
முதியவர் கைது
இந்த கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில் திருவிழா கூட்டத்துக்குள் காரை தறிகெட்டு ஓட்டிய 76 வயது முதியவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.