கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனது 2 குழந்தைகளை விஷயம் கொடுத்து கொன்றுவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஊத்தங்கரையை அடுத்துள்ள கோழிநாயக்கரன் பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த தெய்வா என்பவர், மகன் – மகளை கொன்றுவிட்டு, உயிரை மாய்த்தவர் ஆவார்.
இதையடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக, கவணர் குணசேகரனையும், அவரது தந்தை ஆறுமுகம் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
மருமகளிடம் ஆறுமுகம் தகாத வகையில் நடக்க முயன்றதும், இதுபற்றி கணவனிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததே, தெய்வா உயிரை மாய்த்ததற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.