பொதுவாகவே சர்க்கரை நோயுள்ளவர்கள் எந்தெந்த உணவுகள் சாப்பிடலாம் என்று ஒரு வரையறை காணப்படும்.
இந்த இட்லியானது சர்க்கரை நோயாளிகள் பயம் இல்லாமல் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும்.
ஆகவே வீட்டில் இருந்தப்படியே இந்த ஆரோக்கியமான இட்லியை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை ரவை – ஒரு கப்
- உளுந்தம் பருப்பு – 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி 4 மணிநேரத்திற்கு ஊறவைக்கவும்.
-
பின் கோதுமை ரவையை தனியாக ஊற வைக்க வேண்டும்.
-
அடுத்ததாக உளுத்தம் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும்.
-
மா பதத்திற்கு வந்தவுடன் ரவையை சேர்த்து 3நிமிடங்கள் அரைக்க வேண்டும்.
-
பின் அடுத்த 7மணிநேரங்கள் வரை அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டும்.
-
பின்னர் வழமைப்போன்று இட்லி ஊற்றி சாப்பிடலாம்.