பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை குடித்ததால் நாமக்கல் அருகே 3 வயது குழந்தை உயிரிழந்தார்.
கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன், தனது இருசக்கர வாகனத்திற்கு பெயின்ட் அடிப்பதற்காக, பெயின்ட் மற்றும் தின்னரை வாங்கி வைத்திருந்தார்.
பார்ப்பதற்கு, குடிநீர் பாட்டில் போல காட்சியளித்ததால், கேசவனின் அண்ணன் மகள்கள், 5 வயது மகள் மவுலிஸ்ரீ, 3 வயது மகள் தேஜீஸ்ரீ ஆகியோர் எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில், இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், மூன்று வயது தேஜீஸ்ரீ மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.