கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பிரமந்தனாறு
மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது நாளாந்த கல்வி
நடவடிக்கைகளுக்காக சரியான போக்குவரத்து வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தமது நாளாந்த கல்வி நடவடிக்கைகளுக்காக ஆறு கிலோமீட்டர் அளவில் நடந்து சுண்டிக் குளம் சந்தி
சென்று மீண்டும் அங்கிருந்து ஏ 35 வீதி ஊடாக பயணிக்கும் பிரதான பேருந்துகளிலே
பாடசாலைக்கு சென்று வருவதாகவும் தற்பொழுது கடும் வெயில் காரணமாக மாணவர்கள்
மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
அத்துடன் இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தமது பகுதிக்கு பாடசாலை நேரத்தில் மாணவர்களின்
நலன் கருதி ஓர் பேருந்துகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்தித் தர
வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.