Jayam Ravi – ஐஸ்வர்யா ராயுடன் மேடையில் ஜெயம் ரவி செய்ததை பாருங்க.. மனைவி பார்த்தால் அவ்வளவுதான்

சென்னை: Jayam Ravi (ஜெயம் ரவி) பொன்னியின் செல்வன் 2 பட புரோமோஷனில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ரீமேக் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவந்தார். அதிலும் தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன் ஜெயம் ரவி: சாக்லேட் பாயாக வலம் வந்த ஜெயம் ரவிக்கு பேராண்மை படம் ஆக்‌ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தது. எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வர ஆரம்பித்தார் ரவி. இப்படிப்பட்ட சூழலில் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

 Jayam Ravi with aishwarya Rai video is gone viral on social Media

பொன்னியின் செல்வன்: தனி ஒருவனுக்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சுமாரான வரவேற்பையே பெற்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ஜெயம் ரவி. அப்படத்தில் அருண்மொழிச் சோழன் (ராஜராஜ சோழன்) கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தின் வெயிட்டேஜை ரவி தாங்கிவிடுவாரா என பலரும் கேள்வி எழுப்ப. தனது நடிப்பின் மூலம் பதிலளித்தார் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அருண்மொழி சோழன் கடலுக்குள் விழுவதோடு முதல் பாகம் முடிவடைந்திருந்தது. இந்த பாகத்தில் ஜெயம் ரவிக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளன.

 Jayam Ravi with aishwarya Rai video is gone viral on social Media

புரோமோஷனில் ஜெயம் ரவி: இதனையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பொன்னியின் செல்வன் படக்குழு புரோமோஷனுக்காக சென்றுவருகிறது. நேற்றுகூட ஹைதராபாத்தில் படத்தின் புரோமோஷன் நடந்தது. அதில் மணிரத்னம் மற்றும் படத்தில் நடித்தவர்கள் கலந்துகொண்டனர். புரோமோஷனில் ஜெயம் ரவியின் லுக்கும், அவரது நடவடிக்கைகளும் ரசிகர்களிடையே கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுவருகின்றன.

ஐஸ்வர்யா ராயுடன் ஜெயம் ரவி: இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயும் கலந்துகொண்டார். அப்போது ஜெயம் ரவியும், ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக நடந்துவந்தனர். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராய் தவறுதலாக ஜெயம் ரவியை இடித்துவிட்டார். இதனையடுத்து ஜெயம் ரவி மிகுந்த உற்சாகத்துடன் இரண்டு கைகளை மேலும் கீழும் அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய் இடித்ததில் அவ்வளவு சந்தோஷமா ரவி என கமெண்ட் செய்து இதனை உங்களது மனைவி பார்த்தால் என்ன ஆகும் என்றும் ஜாலியாக கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.