காசர்கோடு டூ திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… ராஜ்தானி தோத்துச்சு போங்க… டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை குறித்த பேச்சு தான் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இது கேரள மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதியை முழுவதுமாக இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் கண்ணூர் முதல் திருவனந்தபுரம் வரை இயக்க திட்டமிடப்பட்டது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

அதன்பிறகு காசர்கோடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தமுள்ள 588 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 5 நிமிடங்களில் கடக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் உள்கட்டமைப்பு வசதிகளை படிப்படியாக விரிவுபடுத்தி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வகையில் முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தற்போதைய பயண நேரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் ராஜ்தானி எக்ஸ்பிரஸை காட்டிலும் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் விரைவாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்றுவிடும். எனவே அதிவேக ரயில் சேவை என்றால் இனி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மட்டுமே என புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்றைய தினம் கொச்சின் வருகை புரிந்துள்ளார்.

டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

இவர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அப்போது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காசர்கோடு டூ திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த ரயிலில் ஏசி சேர் கார், எக்ஸிக்யூடிவ் சேர் கார் என இரண்டு விதமான பெட்டிகள் இருக்கின்றன.

ரயில் எண் 20634 திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ஏசி சேர் கார் கட்டணம்:

திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ காசர்கோடுரூ.1,590திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ கண்ணூர்ரூ.1,260திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ கோழிக்கோடுரூ.1,090திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ ஷோரனூர் ஜங்ஷன்ரூ.950திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ திருச்சூர்ரூ.880திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ எர்ணாகுளம் டவுன்ரூ.765திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ கோட்டயம்ரூ.555
எக்ஸிக்யூடிவ் சேர் கார் கட்டணம்:
திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ காசர்கோடுரூ.2,880திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ கண்ணூர்ரூ.2,415திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ கோழிக்கோடுரூ.2,060திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ ஷோரனூர் ஜங்ஷன்ரூ.1,775திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ திருச்சூர்ரூ.1,650திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ எர்ணாகுளம் டவுன்ரூ.1,420திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ கோட்டயம்ரூ.1,075
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: திருவனந்தபுரம் டூ காசர்கோடு ரூட்… வெளியானது நேர அட்டவணை!

ரயில் எண் 20633 காசர்கோடு டூ திருவனந்தபுரம் சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

ஏசி சேர் கார் கட்டணம்:
காசர்கோடு டூ திருவனந்தபுரம் சென்ட்ரல்ரூ.1,520காசர்கோடு டூ கண்ணூர்ரூ.445காசர்கோடு டூ கோழிக்கோடுரூ.625காசர்கோடு டூ ஷோரனூர் ஜங்ஷன்ரூ.775காசர்கோடு டூ திருச்சூர்ரூ.825காசர்கோடு டூ எர்ணாகுளம் டவுன்ரூ.940காசர்கோடு டூ கோட்டயம்ரூ.1,250
எக்ஸிக்யூடிவ் சேர் கார் கட்டணம்:
காசர்கோடு டூ திருவனந்தபுரம் சென்ட்ரல்ரூ.2,815காசர்கோடு டூ கண்ணூர்ரூ.840காசர்கோடு டூ கோழிக்கோடுரூ.1,195காசர்கோடு டூ ஷோரனூர் ஜங்ஷன்ரூ.1,510காசர்கோடு டூ திருச்சூர்ரூ.1,600காசர்கோடு டூ எர்ணாகுளம் டவுன்ரூ.1,835காசர்கோடு டூ கோட்டயம்ரூ.2,270

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.