மாருதி சுசூகி நிறுவனத்தின் பவர்ஃபுல்லான பலேனோ RS மாடலில் பிரேக்கிங் சிஸ்டம் தொடர்பான ‘வேக்கம் பம்பில்’ ஏற்பட்ட குறைபாடு காரணமாக 7213 கார்களை திரும்ப அழைக்கின்றது.
இந்த திரும்ப பெறும் அழைப்பு 21 ஏப்ரல் 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 27 அக்டோபர் 2016 முதல் நவம்பர் 1, 2019-க்கு இடையே தயாரிக்கப்பட்ட பலேனோ ஆர்எஸ் வாகனங்கள் இந்த பிரேக்கிங் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி குறிப்பிட்டுள்ளது.
மாருதி சுஸுகி ‘வேக்கம் பம்ப்’ சரி செய்யப்பட வேண்டிய காரணமாக, பிரேக் பெடல் பயன்பாட்டில் அதிக முயற்சி தேவை எனவே, பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களின் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மூலம் தகவல் பெறுவார்கள். அங்கு பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலவசமாக மாற்றப்படும்.
தற்பொழுது விற்பனையில் இல்லாத Baleno RS காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் 102bhp மற்றும் 150Nm வழங்குகின்றது.