துபாய் : ரம்ஜான் விடுமுறையின்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் இரண்டு இந்தியர்கள் பலியாகினர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், ஷார்ஜாவில் உள்ள படகு குழாமில் நேற்று முன்தினம் 16 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியது. இதில் கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு விபத்து அபுதாபியில் நிகழ்ந்தது. கேரளாவைச் சேர்ந்த சுபீஷ் என்பவர், இங்கு நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இருவரின் உடலையும், சொந்த ஊருக்கு எடுத்து வரும் வகையில், முறையான நடவடிக்கைகளை நம் நாட்டு துாதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement