வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, மெட்ரோ வாட்டர் உள்ளிட்ட திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதற்கென கிளம்பி சென்ற பிரதமர் மோடியை இரு புறமும் மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மேலும் பாரம்பரிய கலாசார கலைஞர்கள் ஆடி வரவேற்றனர்.
காலை 10:30 மணிக்கு திருவனந்தபுரம் வந்த மோடியை, கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிறகு காசர்கோடு – திருவனந்தபுரம் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, பாளையம் பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட ரூ.1,900 கோடி மதிப்பு வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து, கொச்சி வாட்டர் மெட்ரோ, டிஜிட்டல் அறிவியல் பூங்கா உள்ளிட்ட திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார். இதற்காக ரூ.1,500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, குஜராத் மாநிலம் சூரத்திற்கு செல்கிறார்.

கேரளாவில் நேற்று பிரதமர் மோடியை, பல்வேறு முக்கிய கிறிஸ்தவ பாதிரியார்கள் சந்தித்து பேசினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement