ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! சற்றுமுன் நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு (Live)


பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான உத்தரவொன்றை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்றைய தினம் (25.04.2023) அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! சற்றுமுன் நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு (Live) | Army Force In Sri Lanka President Ranil Order

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் கடந்த 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அழைத்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததுடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.