ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், நுவரெலியாவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கும், புதிய கட்டிடங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செயலணியொன்றை நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அமைச்சரவையின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் 01.05.2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 மாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை கட்டுப்படுத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை விதிக்கவும் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் முறைசாரா அபிவிருத்தியினால் நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.