ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்த போதும் கூட பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. நேற்று சேலத்தில் 100 நேற்றும் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயர்ந்து உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி: இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது ஊட்டிக்கு வெயில் காலம் என்பதால் ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர். தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. இதனால் மக்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
ஊட்டி குளிரை, அனுபவிக்கவும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் வசதியாக மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கே குவிந்து வருகிறார்கள். இதனால் ஊட்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது.
காலையும், மாலையும் வரிசையாக லைனில் வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ்கூட சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோடை சீசன் காரணமாக உதகை மலைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதகையில் இருந்து கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு செல்லும் பாதை ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த பாதைக்கு வாகனங்கள் கோத்தகிரி வழியாக வரலாம். இன்னொரு பக்கம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து உதகை செல்லும் பாதையும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த பாதையில் செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாக வழியாக செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை நிலவரம்: இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும்.