இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹஸ்குவர்னா ஸ்வாரட்பிலன் 401 மாடலின் பெரும்பாலான மாற்றங்களை பெற்றிருப்பதாக தெரிகின்றது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான புதிய கேடிஎம் 390 டியூக் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜின் ஸ்வார்ட்பிலன் 401 மாடலும் பகிர்ந்து கொண்டுள்ளது. எனவே சில மாறுதல்களை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
ஹஸ்குவர்னா ஸ்வாரட்பிலன் 401
புதிய டியூக் மாடலை போன்ற இந்த பைக்கிலும் சற்று கூடுதலான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் என்ஜின் பெற்றிருக்கலாம். ஆனால் பவர் மற்றும் டார்க் விபரங்கள் தெரியவில்லை.
புதிய சப்ஃப்ரேம் கொடுக்கப்பட்டுள்ளதால் முந்தைய பைக்கை விட சற்று நீளமாக உள்ளது. புதிய ஸ்பிலிட் இருக்கை சற்று விசாலமானதாகவும், புதிய பெரிய பில்லியன் கிராப் ரெயிலுடன், ரைடிங்கிற்கு ஏற்றதாகத் தெரிகிறது. ரெட்ரோ ஸ்டைல் பெற்ற ஸ்க்ராம்ப்ளருக்கு பல்வேறு டிசைன் மாற்றங்களையும் பெற்றுள்ளது.
இந்த ஹஸ்குவர்னா ஸ்வாரட்பிலன் 401 பைக் எப்பொழுது அறிமுகம் தொடர்பாக எந்த உறுதியான தகவலும் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.